
உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின் நோக்கம் இந்தியாவிலுள்ள 121 கோடி மக்களுக்கும் தரமான, பாதுகாப்பான, சுகாதாரமான, கலப்படமற்ற உணவை வழங்குவது தான்.
உணவு பொருட்கள் பயிர் செய்யுமிடத்தில் துவங்கி உண்ணுபவர் பயன்படுத்தும் கரண்டி வரை சுகாதாரம் இருக்க வேண்டும்.மத்திய அரசு 2011 ஆகஸ்ட் 5ம் தேதி உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006ஐ கொண்டு வந்தது. உணவு பொருட்கள் தரத்தை கண்காணிக்க தமிழகம் முழுவதும் 32 மாவட்ட நியமன அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் நகராட்சி, ஊராட்சிகளை கண்காணிக்க 18 உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்த சட்டம் வியாபாரிகளுக்கு எதிரானது அல்ல. சாதகமானதே. வரும் 4ம் தேதிக்குள் வியாபாரிகள் தங்களது கடைகள், தொழிற்சாலைகள், சிறு தொழிற் கூடங்களுக்கு உரிமம் பதிவு செய்ய வேண்டும். ஏற்கனவே பதிவு செய்தவர்கள் புதுப்பிக்க வேண்டும். பதிவு செய்யாத ணிக நிறுவனங்கள் மீது நாளொன்றுக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து பதிவு செய்யாத வணிகர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை, 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில், விருத்தாசலம் நகர வணிகர்கள் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பொருளாளர் ஜலந்தரதாஸ் நன்றி கூறினார்.