

பண்ருட்டி:அண்ணாகிராம ஒன்றிய அலுவலகத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர் அலுவலகம் திறப்பு விழா நடந்தது.மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜா தலைமை தாங்கினார். அண்ணாகிராமம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் கந்தசாமி வரவேற்றார்.சிறப்பு விருந்தினராக அண்ணாகிராமம் சேர்மன் சுந்தரி முருகன் அலுவலகத்தைத் திறந்து வைத்தார். விழாவில் ஒன்றிய சேர்மன் சம்மந்தம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துரைசாமி, குமார், அலுவலக மேனேஜர் சதீஷ்குமார், ஆத்மா குழுத் தலைவர் ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.