ஞாயிறு, 15 ஜூலை, 2012

கடைகளில் அதிகாரிகள் ஆய்வு : காலாவதி பொருட்கள் பறிமுதல்

விருத்தாசலம் : விருத்தாசலம் கடைவீதி, பெரியார் நகரில் உள்ள பேக்கரி, மளிகை கடைகளில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்துத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
கடலூர் மாவட்ட நிய மன அலுவலர் லட்சுமிநாராயணன் உத்தரவின் பேரில், விருத்தாசலம் நகர உணவு பாதுகாப்பு மற்றும் மருந்துத்துறை சார்பில் நகர உணவு பாதுகாப்பு அலுவலர் நல்லதம்பி தலைமையிலான குழுவினர் நேற்று மாலை கடைவீதி, பெரியார் நகர் பகுதிகளில் உள்ள பேக்கரி, மளிகை கடைகள், பழச்சாறு நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வில், உணவு பொருட்களின் தரம், சுகாதாரமற்ற உணவு, கலப்பட பொருட்கள் வினியோகம், கடை உரிமம், காலாவதி காலம் குறித்து சோதனை செய்யப்பட்டது. மேலும், சுகாதாரமான கலப்படம் இல்லாத உணவுப் பொருட்களை விற்கவும், உரிமம் பெற்று கடை நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
ஆய்வின்போது காலா வதியான 5 கிலோ மைதா மாவு பாக்கெட்டுகள் பறி முதல் செய்து அழிக்கப் பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக