வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

பரங்கிப்பேட்டையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை-தினகரன் செய்தி

பரங்கிப்பேட்டையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி குழந்தைகளுக்கு புற்றுநோயை உண்டாக்கும் உணவு பொருள்களை கைப்பற்றி அழித்தனர்.
பரங்கிப்பேட்டை நகரில் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் விற்கப்படும் உணவு பொருள்கள் தரமானதாகவும், பாதுகாப்பானதாகவும் இல்லை என கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலகத்திற்கு புகார் சென்றது.  அதன் பேரில் கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் ராஜா தலைமை யில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஏழுமலை, நல்லதம்பி, மாரிமுத்து, குணசேகரன், நந்தகுமார், அருண்மொழி ஆகியோர் பரங்கிப்பேட்டை நகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
டீ கடை, பெட்டி கடை, சுவீட் ஸ்டால், அரிசி மண்டி போன்ற பல்வேறு கடைகளில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். அதுபோல் பெட்டி கடைகளில் அளவுக்கு அதிகமாக கலர் சேர்த்து செய்யப்பட்டிருந்த இனிப்பு மற்றும் கார வகை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து நடுரோட்டில் கொட்டி அழித்தனர். வாரச்சந்தை நடக்கும் பகுதிக்கு சென்ற அதிகாரிகள் குழுவினர், கலர் பவுடர் அதிகமாக கலக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த வத்தல் கள், அப்பளங்களை கைப்பற்றி ரோட்டில் கொட்டி அழித்தனர்.
பின்னர் நிருபர்களிடம் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா கூறியதாவது:
பரங்கிப்பேட்டை பகுதியில் உள்ள கடைகளில் அளவுக்கு அதிகமாக கலர் கலந்து உணவுப் பொருள் கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரையடுத்து அதிரடி ஆய்வு நடத்தப்பட்டது.  குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் உணவுப் பொருள்களில் அளவுக்கு அதிமாக கலர் கலந்துள்ளது கண்டுபிடிக்கப் பட்டு, அவற்றை கைப் பற்றி அழித்துள்ளோம். பொதுமக்கள் தங்களது குழந்தைகளுக்கு இது போன்ற உணவுப் பொருள் களை வாங்கி கொடுக்கக் கூடாது.
இந்த உணவு பொருள்களை பொதுமக்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.  இதனால் புற்றுநோய் ஏற்படும் என்றார்.

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

ஹோட்டல் மற்றும் கடைகளில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை

  சிதம்பரம் நகரில் ஹோட்டல் மற்றும் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர்.÷கடலூர் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி எம்.பி.ராஜா, உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் பத்மநாபன் (சிதம்பரம்), ஏழுமலை (பரங்கிப்பேட்டை), நந்தகுமார் (கடலூர்) மற்றும் உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் சிதம்பரம் நகரில் பஸ் நிலையம், எஸ்.பி.கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஹோட்டல்கள் மற்றும் டீக்கடைகள், ஸ்வீட் ஸ்டால்கள் ஆகியவற்றில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.÷பஸ் நிலையத்தில் டீக்கடைகளில் கலப்பட டீத்தூள்களை கைப்பற்றி அழித்தனர். மேலும் சுகாதாரமற்ற நிலையில் உள்ள உணவுப் பொருள்களையும் கைப்பற்றி அழித்தனர்.÷எஸ்.பி.கோயில் தெருவில் உள்ள தனியாருக்குச் சொந்தமான ஹோட்டலில் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த நீண்ட நாள்களான கோழிக்கறியை கைப்பற்றி அகற்றினர்.÷சிதம்பரம் நகரில் உணவுப் பாதுகாப்பு துறையினர் பெயரளவுக்கே சோதனை மேற்கொண்டதாகவும், நகரில் சுகாதாரமற்ற நிலையில் பல்வேறு கடைகள் உள்ளன. ÷அவற்றில் சோதனை மேற்கொண்டு சுகாதாரமற்ற உணவுப் பொருள்களை பறிமுதல் செய்து சோதனைக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.÷அதிகாரிகள் தொடர்ச்சியாக சோதனை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.