வியாழன், 16 ஆகஸ்ட், 2012

ஹோட்டல் மற்றும் கடைகளில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை

  சிதம்பரம் நகரில் ஹோட்டல் மற்றும் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர்.÷கடலூர் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி எம்.பி.ராஜா, உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் பத்மநாபன் (சிதம்பரம்), ஏழுமலை (பரங்கிப்பேட்டை), நந்தகுமார் (கடலூர்) மற்றும் உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் சிதம்பரம் நகரில் பஸ் நிலையம், எஸ்.பி.கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஹோட்டல்கள் மற்றும் டீக்கடைகள், ஸ்வீட் ஸ்டால்கள் ஆகியவற்றில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.÷பஸ் நிலையத்தில் டீக்கடைகளில் கலப்பட டீத்தூள்களை கைப்பற்றி அழித்தனர். மேலும் சுகாதாரமற்ற நிலையில் உள்ள உணவுப் பொருள்களையும் கைப்பற்றி அழித்தனர்.÷எஸ்.பி.கோயில் தெருவில் உள்ள தனியாருக்குச் சொந்தமான ஹோட்டலில் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த நீண்ட நாள்களான கோழிக்கறியை கைப்பற்றி அகற்றினர்.÷சிதம்பரம் நகரில் உணவுப் பாதுகாப்பு துறையினர் பெயரளவுக்கே சோதனை மேற்கொண்டதாகவும், நகரில் சுகாதாரமற்ற நிலையில் பல்வேறு கடைகள் உள்ளன. ÷அவற்றில் சோதனை மேற்கொண்டு சுகாதாரமற்ற உணவுப் பொருள்களை பறிமுதல் செய்து சோதனைக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.÷அதிகாரிகள் தொடர்ச்சியாக சோதனை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

1 கருத்து:

  1. கலப்படம், நீண்ட நாட்கள் கெடும்படி வைத்தல் ,இவற்றுடன் பூச்சிக் கட்டுபாடுக்கும் முன்னுரிமை தேவை .....

    பதிலளிநீக்கு