வியாழன், 20 டிசம்பர், 2012

கடலூரில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி-தினகரன் செய்தி


கடலூர், : கடலூரில் மாவட்ட உணவு பாதுகாப்பு, மருந்து நிர்வாகத்துறை சார்பி-ல் ரோட்டோரத்தில் பரோட்டா போடக்கூடாது உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த விழிப்புணர்வு பேரணிக்கு கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நல அலுவலர் ராஜா தலைமை தாங்கினார். பேரணியை நகர்மன்ற தலைவர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். உழவர் சந்தை அருகே துவங்கிய பேரணி அண்ணா மேம்பாலம், பாரதி பூங்கா வழியாக மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு அருகே முடிந்தது. பேரணியில் அரசு ஐடிஐ மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள் கடலூர் நகர, வட்டார உணவு பாதுகாப்பு நல அலுவலர்கள் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர். பேரணியின் போது பஜ்ஜி, சிக்கனில் கலர்பொடி சேர்க்க கூடாது. ரோட்டோரத்தில் பரோட்டா போடக்கூடாது.
டீத்தூளில் கலப்படம் செய்யக்கூடாது. ஈ மொய்த்த தின்பண்டங்களை விற்க கூடாது என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக