சனி, 8 டிசம்பர், 2012

அமலாகிறது கடலூர் மாவட்டத்தில் குடிதண்ணீர் பாக்கெட்டுகளுக்கு தடை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி உத்தரவு-தினத்தந்தி செய்தி


கடலூர் மாவட்டத்தில் வருகிற 1–ந்தேதி முதல் குடிதண்ணீர் பாக்கெட்டுகளுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
குடிநீர் தயாரிப்பாளர்கள் கூட்டம்
கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலர் டாக்டர் ராஜா தலைமையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பாளர்களின் கூட்டம் கடலூரில் நேற்று நடந்தது.
கூட்டத்தில் டாக்டர் ராஜா பேசுகையில், குடிநீர் உற்பத்தி நிறுவனங்களில் சுகாதாரமான முறையை கடைபிடிக்க வேண்டும், டப்பா, டயர், பாட்டில்கள், உபயோகப்படுத்தப்பட்ட குடிநீர் பாக்கெட்டுகள், கேன்கள் போன்றவற்றை சுகாதாரமான முறையில் அப்புறப்படுத்தி, டெங்கு கொசுப்புழு வளரா வண்ணம் தடுக்க வேண்டும்.
போலியானது
கடைகளில் விற்பனை செய்யப்படும் பாக்கெட் குடிநீர் பாக்கெட்டுகளை சோதனை செய்த போது, எராளமான தண்ணீர் பாக்கெட்டுகள் போலியானது என்று தெரிய வந்துள்ளது. எனவே ஜனவரி மாதம் 1–ந்தேதி முதல் குடிதண்ணீர் பாக்கெட்டுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது என்றார்.
இக்கூட்டத்தில் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்க பொறுப்பாளர்கள் வாசுதேவன், குமார், முருகேசன், செந்தில்குமார் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக