புதன், 6 மார்ச், 2013

நுகர்வோர் பாதுகாப்பு கூட்டம்-தினமலர் செய்திநெல்லிக்குப்பம்:நெல்லிக்குப்பம் நகராட்சியில் நுகர்வோர் பாதுகாப்புக் கூட்டம் நடந்தது.
சேர்மன் சுதாகர் தலைமை தாங்கினார். நுகர்வோர் பாதுகாப்புக் குழு கூட்டமைப்பு பொதுச் செயலர் மெய்யழகன், கண்ணன், பொறியாளர் இளஞ்செழியன், துப்புரவு அலுவலர் பரமசிவம், உணவு பாதுகாப்பு அலுவலர் ரவிச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், ஓட்டல்களில் தரமான உணவு வழங்க வேண்டும். விலைப்பட்டியல் வைக்க வேண்டும் நகராட்சி பகுதியில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். சுடுகாடுகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அனுமதி இல்லாத இடங்களில் இறைச்சி விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க வேண்டும்.
கால்நடை மருத்துவர் பரிசோதனைக்கு பிறகே இறைச்சி விற்பனை செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக