செவ்வாய், 23 ஏப்ரல், 2013

பஸ் நிலைய கடைகளில் காலாவதியான உணவுப் பொருள்கள் அழிப்பு-தினமணி செய்தி


கடலூரில் விற்பனை செய்யப்பட்ட காலாவதியான குளிர்பானங்களை அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர்.
கடலூர் பஸ் நிலைய கடைகளில் பலர் காலாவதியான குளிர்பானங்கள், பிரட்கள் விற்பனை செய்வதாக புகார் வந்தது. அதையொட்டி மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரி ராஜா, கடலூர் நகர் நல அலுவலர் குமரகுரு ஆகியோர் பஸ் நிலையக் கடைகளில் சனிக்கிழமை சோதனை நடத்தினர்.
அங்கு பல கடைகளில் ரஸ்னா பாக்கெட்டுகள், காலாவதியான குளிர்பானங்கள், பிரட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பல பொருள்கள், தின்பண்டங்களில் காலாவதியாகும் தேதி குறிப்பிடாமல் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.
அதேப்போன்று பஸ் நிலையத்தில் உள்ள டீ கடையில் டீ தூளை சோதனை செய்தனர். அதுவும் கலப்படத் தூளாக இருந்ததால் அவற்றை கீழே கொட்டி அழித்ததுடன் எச்சரிக்கை செய்தனர்.

வியாழன், 18 ஏப்ரல், 2013

உணவு அதிகாரி ஆய்வில் காலாவதியான பொருட்கள் ஆற்றில் கொட்டி அழிப்பு


DSC00028
புவனகிரி:புவனகிரி பகுதியில் கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரி நடத்திய திடீர் சோதனையில் காலாவதியான பொருட்கள் அழிக்கப்பட்டது.
மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள்  குணசேகரன் , எழுமலை,ரவிச்சந்திரன் ,பத்மநாபன் ,நந்தகுமார்,அருண்மொழி ஆகியோர் புவனகிரி பகுதியில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு நடத்தினர்.
அப்போது 25க்கும் மேற்பட்ட குளிர்பான கடை மற்றும் ஸ்வீட் ஸ்டால்களில் காலாவதியான குளிர்பானங்கள், வாட்டர் பாக்கெட்டுகள் மற்றும் தரமற்ற இனிப்பு வகைகள் பறிமுதல் செய்து, பேரூராட்சி டிராக்டர் மூலம் எடுத்து சென்றுச் வெள்ளாற்றில் கொட்டி அழிக்கப்பட்டது.
கடைகளில் காலாவதியான மற்றும் தரமற்ற பொருட்களை விற்பனை செய்யக்கூடாது எனவும், மீறி விற்பனை செய்வது கண்டு பிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

ரஸ்னா சாப்பிட்டு வாந்தி, மயக்கம் எதிரொலி: உணவு பாதுகாப்பு அதிகாரி அதிரடி சோதனை-தினமலர் செய்தி


14_04_2013_010_002_001 காட்டுமன்னார்கோவிலில் ரஸ்னா சாப்பிட்டு 6 பேர் வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து நேற்று மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி திடீர் சோதனை நடத்தி காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்தார். காட்டுமன்னார்கோவில் அடுத்த தெற்கிருப்பு பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் நேற்று முன்தினம் ரஸ்னா வாங்கி சாப்பிட்ட 4 குழந்தைகள் உட்பட 6 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து நேற்று காட்டுமன்னார்கோவில் பகுதி கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி திடீர் சோதனை மேற்கொண்டார். காட்டுமன்னார்கோவில் பஸ் நிலையம், கச்சேரி தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள பெட்டிக்கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் காலாவதியான உணவு பொருட்கள், காலாவதி தேதி இல்லாத பாக்கெட் உணவுகள், பாக்கெட் குளிர்பானங்கள் ஆகியவை பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. மேலும், டீ கடைகளில் கலப்பட டீ தூள் பறிமுதல் செய்யப்பட்டது. டீ கடைகள் மற்றும் குளிர்பான கடைகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பயன்படுத்த வேண்டும். காலாவதியான உணவு பொருட்கள் இருப்பு வைக்கக் கூடாது. அனைத்து பாக்கெட் பொருட்களிலும் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி குறிப்பிட்டு பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. வட்டார மருத்துவர் சிவானந்தம், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொளஞ்சியான், நல்லதம்பி, ரவிச்சந்திரன், பன்னீர்செல்வம், சுப்ரமணியன், அருண்மொழி, சுகாதார மேற்பார்வையாளர் தம்பா உடனிருந்தனர்.