செவ்வாய், 23 ஏப்ரல், 2013

பஸ் நிலைய கடைகளில் காலாவதியான உணவுப் பொருள்கள் அழிப்பு-தினமணி செய்தி


கடலூரில் விற்பனை செய்யப்பட்ட காலாவதியான குளிர்பானங்களை அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர்.
கடலூர் பஸ் நிலைய கடைகளில் பலர் காலாவதியான குளிர்பானங்கள், பிரட்கள் விற்பனை செய்வதாக புகார் வந்தது. அதையொட்டி மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரி ராஜா, கடலூர் நகர் நல அலுவலர் குமரகுரு ஆகியோர் பஸ் நிலையக் கடைகளில் சனிக்கிழமை சோதனை நடத்தினர்.
அங்கு பல கடைகளில் ரஸ்னா பாக்கெட்டுகள், காலாவதியான குளிர்பானங்கள், பிரட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பல பொருள்கள், தின்பண்டங்களில் காலாவதியாகும் தேதி குறிப்பிடாமல் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.
அதேப்போன்று பஸ் நிலையத்தில் உள்ள டீ கடையில் டீ தூளை சோதனை செய்தனர். அதுவும் கலப்படத் தூளாக இருந்ததால் அவற்றை கீழே கொட்டி அழித்ததுடன் எச்சரிக்கை செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக