வியாழன், 27 நவம்பர், 2014

ஜாம் பாட்டிலில் பூச்சி: உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஆய்வு

IMG-20141126-WA0006

 

கடலூரில் விற்பனையான ஜாம் பாட்டிலில் பூச்சி இருந்தது தொடர்பாக உணவுப் பாதுகாப்பு அலுவலர் திங்கள்கிழமை விசாரணை நடத்தினார்.
அனைத்து நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பேரவை துணைத் தலைவர் ஆர்.துவாரகநாத் கந்தசாமி. இவர், கடந்த 19-ம் தேதி கடலூர் சங்கரநாயுடு தெருவில் உள்ள ஒரு கடையில் மிக்ஸ்டு புரூட் ஜாம் வாங்கி குடும்பத்தினருடன் சாப்பிட்டார். அதில் விஷத்தன்மை உள்ள சில பூச்சிகள் இறந்த நிலையில் இருந்தது தெரிய வந்தது.
இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடலூர் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலருக்கு வெள்ளிக்கிழமை புகார் மனு அனுப்பினார்.
இந்த புகார் தொடர்பாக மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் எம்.பி.ராஜா திங்கள்கிழமை சம்பந்தப்பட்ட கடையில் ஆய்வு மேற்கொண்டார். அதில், குறிப்பிட்ட ஜாம் பாட்டிலுடன் வந்திருந்த மற்ற பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. அந்த பாட்டில்கள் ஆய்வுக்கு சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், அதுவரையில் அந்த வகை ஜாமை விற்பனை செய்யக் கூடாதென கடை உரிமையாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக எம்.பி.ராஜா தெரிவித்தார்.

இயற்கை பானம் தயாரிப்பு: கடலூரில் அதிகாரிகள் ஆய்வு

26_11_2014_105_012_00126_11_2014_105_011

புதன், 26 நவம்பர், 2014

திரையரங்கு கேன்டீன்களில் காலாவதி தின்பண்டங்கள் பறிமுதல்

கடலூர், நவ. 25:
கடலூர் பகுதி திரையரங்குகளில் உள்ள கேன்டீன்களில் விற்பனை செய்யப்படுகின்ற தின்பண்டங்கள் தரமானதாக இல்லை என்ற புகார்களின் பேரில் நேற்று கடலூர் தந்தை பெரியார் சிலை அருகே உள்ள பிரபல திரையரங்கத்திற்குள் உள்ள கேண்டீனில் உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் ராஜா தலை மையில் அலுவலர்கள் நந்தகுமார், சுப்ரமணியன், மாரிமுத்து, கொளஞ்சியான் ஆகியோர் சோதனையிட்டனர்.
இதில் கடையில் விற்கப்பட்ட 100 பாக்கெட் கான்பார்ப், 100 மிராண்டா பட்டில்கள், வெங்காய வத்தல்கள் 200 கி.லோ என ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள தின்பண்டங்கள் மற்றும் குளிர்பதனங்கள் காலவாதியானவை என கண்டறியப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் கேன்டீன் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர். இதுபோல் மீண்டும் நடந்தால் திரையரங்கிற்கு சீல் வைக்க நேரிடும் என உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா தெரிவித்தார். மாவட்டம் முழுவதும் உள்ள திரையரங்கங்களில் இதுபோல் அதிரடி சோதனைகள் நடத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

புதன், 19 நவம்பர், 2014

துண்டு பிரசுரம் வழங்கல்

18_11_2014_101_018

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் இறைச்சிக் கடைகளை தூய்மையாக வைத்து கொள்ள வலியுறுத்தி துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ள இறைச்சிக் கடைகளை ஆய்வு செய்து பராமரிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றிய துண்டு பிரசுரங்கள் வழங்கும்படி உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பேரில் நெல்லிக்குப்பத்தில் உள்ள இறைச்சிக் கடைகளை உணவு பாதுகாப்பு அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். இறைச்சி கூடத்தை தீ பிடிக்காத கட்டடங்களில் மட்டுமே நடத்த வேண்டும். கழிவுகளை முறையாக அப்புறபடுத்த வேண்டும். தரையை தினமும் சுத்தம் செய்து துர்நாற்றம் இல்லாமல் இருக்க பினாயில் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். உணவு பாதுகாப்பு துறையில் அனுமதி பெற வேண்டும். இறைச்சியை மூடிவைத்து விற்க வேண்டும். இந்த விதிகளைக் கடைபிடிக்கா விட்டால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

திங்கள், 10 நவம்பர், 2014

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இறைச்சி கடைகளில் ஆய்வு

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம் பகுதிகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நேற்று ஆய்வு செய்தனர். பண்ருட்டி அடுத்த நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம் பகுதிகளில் சுகாதாரமற்ற முறையில் கோழி மற்றும் ஆட்டு இறைச்சி கடைகள் இயங்கி வருவதாக வந்த புகார்களின் பேரில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கடலூர் ரவிச்சந்திரன், அண்ணாகிராமம் கந்தசாமி, குறிஞ்சிப்பாடி குணசேகரன் ஆகியோர் அடங்கிய குழுவினர்கள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, இறைச்சியின் கழிவுகளை கடை அருகிலேயே குவித்து வைத்திருந்த 20க்கும் மேற்பட்ட கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி, குறைகளை 15 நாளில் நிவர்த்தி செய்ய அறிவுருத்தினர். தவறினால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

குடிநீர் டேங்கர் லாரிகளுக்கு உணவு பாதுகாப்பு துறை கெடு

 

கடலூர், நவ. 9:

கடலூர் மாவட்டத்தில் இயங்கும் குடிநீர் டேங்கர் லாரிகளுக்கு, உணவு பாதுகாப்புத்துறை டிசம்பர் 5ம் தேதி வரை கெடு வழங்கியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வீடுகளுக்கு மட்டுமல்லாமல் டீக்கடைகள், உணவு விடுதிகள், தனியார் நிறுவனங்கள், தங்கும் விடுதிகள் உள்ளிட்ட பல இடங்களுக்கு டேங்கர் லாரிகள் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

இவ்வாறு சப்ளை செய்யும் டேங்கர் லாரிகள் துருப்பிடித்து சுகாதார சீர்கேடாக காட்சி அளித்தன. உள்பகுதி துரு பிடித்திருந்ததால் குடிநீரிலும் துரு கலந்து வந்தது. குடிதண்ணீரும் கலங்கலாகவும் வாடையுடனும் விநியோகிக்கப்பட்டது. ஒரு குடம் 5 ரூபாய்க்கு வாங்கிய பொது மக்கள் இதனால் கலக்கம் அடைந்தனர். இது தொடர்பாக கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறைக்கு பல்வேறு புகார்கள் வந்தன. இதன் அடிப்படையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி டாக்டர் ராஜா குடிநீர் டேங்கர் லாரிகளை அதிரடியாக ஆய்வு செய்தார்.

ஆயிரம் லிட்டர் குடிதண்ணீரில் நான்கரை கிராம் பிளீச்சிங் பவுடர் கலக்கப்படவேண்டும் என்ற விதிமுறையை எந்த டேங்கர் லாரிகளும் பின்பற்றவில்லை. மேலும் பல டேங்கர் லாரிகள் கழிவுநீர் ஏற்றிச்செல்லும் வண்டிப்போல சுகாதார சீர்கேட்டுடன் காட்சி அளித்தன.

இந்நிலையில், பொதுமக்கள் சுகாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமாரின் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்புத் துறையால் குடிநீர் டேங்கர் லாரிகள் உரிமையாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட அதிகாரி டாக்டர் ராஜா தலைமை தாங்கினார். வட்டார பாதுகாப்பு அலுவலர்கள் நல்லதம்பி, சுப்ரமணியன், ரவிச்சந்திரன், நந்தக்குமார் மற்றும் 20 டேங்கர் லாரி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

டிசம்பர் 5ம் தேதிக்குள் அனைத்து குடிநீர் டேங்கர் லாரிகளின் உட்புறமும், வெளிப்புறமும் குடிநீருக்கு பாதகம் ஏற்படுத்தாத பெயின்ட் அடிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு ஆயிரம் லிட்டர் குடிதண்ணீருக்கும் நான்கரை கிராம் பிளீச்சிங் பவுடர் கலக்கப்பட வேண்டும். அனைத்து குடிநீர் லாரிகளையும் உணவு பாதுகாப்புத்துறையில் பதிவு செய்து அந்த பதிவு எண்ணையும் உரிமையாளர்கள் பெயர் மற்றும் அவர்களின் செல்நம்பர் ஆகியவற்றை டேங்கரின் மேல் குறிப்பிடவேண்டும்.

இவ்வாறு எல்லாப் பணிகளையும் முடித்து டிசம்பர் 5ம் தேதி மஞ்சக்குப்பம் மைதானத்தில் ஆய்வுக்கு அனைத்து குடிநீர் டேங்கர் லாரி களையும் கொண்டுவந்து நிறுத்த வேண்டும் என இக்கூட்டத்தில் மாவட்ட அதிகாரி டாக்டர் ராஜா உத்தரவிட்டார்.

கடலை எண்ணெய் பாக்கெட்டில் பாமாயில் விற்பனை

கடலூர்

கடலை எண்ணெய் பாக்கெட்டில் பாமாயில் விற்பனை செய்ததாக 2 எண்ணெய் நிறுவனங்கள் மீது உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் கலப்பட உணவுப் பொருள் விற்பனையை தடுப்பதற்காக உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு பண்ருட்டியில் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, பிரபல பாக்கு நிறுவனத்தின் பாக்கு பாக்கெட்டுகளைப் போன்ற நிறத்திலும், வடிவத்திலும் ஒரே மாதிரியாக இருந்த பாக்கு பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதை கண்டுபிடித்தனர்.

இதுதொடர்பாக மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரி ராஜாவிடம் பண்ருட்டி வியாபாரிகள் முறையிட்டனர். இதுகுறித்து உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் கேட்ட போது, தமிழகத்தில் உள்ள பிரபல பாக்கு கம்பெனியின் தயாரிப்புகளை போன்ற நிறத்திலும், வடிவத்திலும் மற்றொரு பாக்கு தயாரிப்பு நிறுவனம் பாக்கு பாக்கெட்டுகளை தயாரித்து விற்பனை செய்வதாக புகார்கள் வந்தன.

உணவுப் பாதுகாப்பு சட்டப்படி ஒரு நிறுவனத்தின் தயாரிப்புகளை மற்ற நிறுவனங்கள் காப்பி அடிக்கக்கூடாது என்பதால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பாக்கு பாக்கெட்டுகளை சோதனைக்காக சென்னையில் உள்ள உணவு பகுப்பாய்வுக்கு அனுப்பி இருக்கிறோம். அந்நிறுவனத்தின் உரிமையாளர்களிடம், பாக்கு பாக்கெட்டுகளின் நிறத்தில் உரிய மாற்றங்களை செய்யும்படி அறிவுறுத்தியிருக்கிறோம். இது முதல் முறையாக இருப்பதால் வழக்குப் பதிவு செய்யவில்லை.

கடலூர் மாவட்டத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் இதுவரை நடத்திய ஆய்வுகளில் கைப்பற்றப்பட்ட 104 உணவு பொருள்களின் மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பினோம். அவற்றில் 87 உணவு மாதிரிகளில் கலப்படம் இல்லையென்று தெரியவந்தது. 14 மாதிரிகளில் கலப்படம், லேபிள் குறைபாடு போன்றவை இருந்தன, அது தொடர்பாக வழக்குப் பதிவு செய்திருக்கிறோம்.

இதில் 5 வழக்குகள் எண்ணெய் நிறுவனங்கள் சம்பந்தப்பட்டவை. 2 எண்ணெய் நிறுவனங்கள், பாக்கெட்டுகளின் மீது நிலக்கடலை படத்தை பொறித்து உள்ளே பாமாயிலை வைத்து விற்பனை செய்தது கண்டு பிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அந்த 2 எண்ணெய் நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளோம் என்றார்.

குடிநீர் லாரிகளை பதிவுசெய்ய உணவுப் பாதுகாப்புத் துறை கெடு

கடலூர் மாவட்டத்தில் இயங்கும் குடிநீர் டேங்கர் லாரிகள் டிசம்பர் 5ஆம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும் என உணவுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. டேங்கர் லாரிகள் சுகாதாரமான முறையில் குடிநீர் வழங்குவதில்லை என, கடலூர் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறைக்கு பல்வேறு புகார்கள் வந்தன.

இதன் அடிப்படையில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி ராஜா குடிநீர் டேங்கர் லாரிகளை ஆய்வு செய்தார். இதில் சுகாதாரச் சீர்கேட்டுடன் டேங்கர் லாரிகள் செயல்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில், குடிநீர் டேங்கர் லாரி உரிமையாளர்கள் கூட்டம் கடலூரில் அண்மையில் நடைபெற்றது. மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் ராஜா தலைமை வகித்தார். வட்டார அலுவலர்கள் நல்லதம்பி, சுப்பிரமணியன், ரவிச்சந்திரன், நந்தக்குமார் மற்றும் 20 டேங்கர் லாரி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

டிசம்பர் 5ஆம் தேதிக்குள் அனைத்து குடிநீர் டேங்கர் லாரிகளின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் குடிநீருக்கு பாதகம் ஏற்படுத்தாத பெயின்ட் அடிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு ஆயிரம் லிட்டர் குடிநீருக்கும் நான்கரை கிராம் பிளிச்சிங் பவுடர் கலக்கப்பட வேண்டும்.

அனைத்து குடிநீர் லாரிகளையும் உணவுப் பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து அந்த பதிவு எண்ணையும் உரிமையாளர்கள் பெயர் மற்றும் அவர்களின் செல்போன் எண் ஆகியவற்றை டேங்கரின் மேல் குறிப்பிடவேண்டும்.

எல்லாப் பணிகளையும் முடித்து டிசம்பர் 5ஆம் தேதி மஞ்சக்குப்பம் மைதானத்தில் லாரிகளை கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என ராஜா உத்தரவிட்டார்.

நுகர்வோர் உரிமை தினம்: கலெக்டர் பரிசளிப்பு

New Doc 1_1

கடலூர் : கடலூரில், நடைபெற்ற உலக நுகர்வோர் உரிமை தின விழாவில், பள்ளி, கல்லூரி அணிகளுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.
ஐ.நா., அறிவுறுத்தலின்படி நவம்பர் 7ம் தேதி உலக நுகர்வோர் உரிமை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடலூர் டவுன்ஹாலில் நடந்த விழாவிற்கு மாவட்ட வழங்கல் அலுவலர் தங்கவேலு வரவேற்றார். தலைமை தாங்கிய கலெக்டர் சுரேஷ்குமார் கல்லூரி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் மற்றும் பள்ளி மாணவர் நுகர்வோர் மன்றங்கள் என தலா மூன்று மன்றங்களுக்கு பரிசு வழங்கினார்.விழாவில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரேணுகாம்பாள், ஆர்.டி.ஓ., ஷர்மிளா, துணை பதிவாளர் கமலக்கண்ணன், நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் மணி, தொழிலாளர் ஆய்வாளர் ஜெய்சங்கர், உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜா உள்ளிட்டோர் பேசினர்.மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் எழிலன் நன்றி கூறினார்.

கடலூரில் உணவு பாதுகாப்புத் துறை வழிகாட்டு விழிப்புணர்வுக் கூட்டம்கடலூர் : உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் கடலூர் நகரில் டேங்கர் லாரிகளில் வினியோகம் செய்யும் லாரி உரிமையாளர்களுடனான விழிப்புணர்வுக் கூட்டம் நேற்று நடந்தது.
கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை அலுவலர்கள் ரவிச்சந்திரன், சுப்ரமணியன், நந்தகுமார் ஆகியோர் கேப்பர் மலைப் பகுதியிலிருந்து கடலூர் நகருக்கு டேங்கர் லாரிகள் மற்றும் டிராக்டர்களின் குடிநீர் வினியோகம் செய்வதற்கான தண்ணீர் பிடிக்கும் இடங்களை ஆய்வு செய்தனர். அப்போது அடிப்படை குறைகள் கண்டறியப்பட்டது.இவற்றை சரிசெய்யும் பொருட்டு, நேற்று கடலூர் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் விழிப்புணர்வுக் கூட்டம் கடலூர் தாலுகா அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா தலைமை தாங்கினார். ஆய்வாளர்கள் ரவிச்சந்திரன், பத்மநாபன், குணசேகரன், நந்தகுமார், கந்தசாமி, செந்தில் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 15க்கும் மேற்பட்ட குடிநீர் வினியோகம் செய்யும் லாரி உரிமையாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், குடிநீரை கிருமி நீக்கம் செய்யப்பட்டு விநியோகிக்கப்பட வேண்டும். 1,000 லிட்டர் குடிநீரில் 4.5 கிராம் குளோரின் பவுடர் கலந்து விற்பனை செய்ய வேண்டும். வாரம் ஒரு முறை கண்டிப்பாக தண்ணீர் நிரப்பும் உட்பகுதியை சுத்தம் செய்ய வேண்டும்.குடிநீர் எடுத்துச் செல்லும் வண்டிகளுக்கு நீலநிற வர்ணம் பூசப்பட்டிருக்க வேண்டும். குடிநீர் வினியோகம் செய்யும் பணிகளுக்கு மருத்துவ தகுதிச் சான்று மற்றும் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். வாகனத்திற்கான உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின்படி பதிவு உரிமம் பெற வேண்டும். வாகனத்தில் ஆய்வு பதிவேடு கண்டிப்பாக இருக்க வேண்டும்.இந்த சட்ட விதிமுறைகளை செய்து குடிநீர் வினியோகம் செய்யும் வாகனங்கள் வரும் டிசம்பர் 5ம் தேதி மஞ்சக்குப்பம் மைதானத்தில் ஆய்வுக்கா நிறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

வெள்ளி, 7 நவம்பர், 2014

உணவு பாதுகாப்பு சட்டம் திரும்பப் பெறப்பட்டதா? வர்த்தக சங்கப் பொதுச் செயலாளர் விளக்கம்

Dinamani

 

By சீனிவாசன், பண்ருட்டி

மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் திரும்பப் பெறப்பட்டதாக  தவறான தகவல் வெளியானது.

இது குறித்து தமிழ்நாடு உணவு பொருள் வியாபாரிகள் பொதுச் செயலளர் சா. ராஜேந்திரன் கூறியதாவது,

உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006ஐ, மத்திய அரசு திரும்பப் பெற்றுக் கொண்டதாக சில தனியார் தொலைக்காட்சிகளில் நேற்று செய்தி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து சில சங்கங்களும் இதேச் செய்திகளை குறுஞ்செய்தி மூலம் வணிகளுர்களுக்கு அனுப்பி வருகின்றன.

இது முற்றிலும் தவறான தகவல். மத்திய அரசு அவ்வாறு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

அதாவது, மத்திய உணவு பாதுகாப்புத் துறை தலைவர் தலைமையில் 22 உறுப்பினர்கள் கொண்ட குழு இருந்தது. அதில் கூடுதலாக தலைமை செயல் தலைவர் ஒருவரை நியமனம் செய்யவும், இக்குழுவின் 3ல் ஒரு பங்கு பெண் உறுப்பினர்களும், 10 நபர்களில் விவசாயிகள், சில்லறை வியாபாரிகள், நுகர்வோர், உணவு விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் இருக்க வேண்டும் என ஒரு சட்ட திருத்தத்தை அப்போதைய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் கடந்த 19.2.2014 அன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஒப்புதலை பெற இந்த மசோதாவை தாக்கல் செய்தார்கள்.

இந்த மசோதா நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருந்து வந்தது. இதனை தற்போதைய மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு 5.11.2014 அன்று திரும்பப் பெறுவதற்கும் புதிய சட்ட திருத்த மசோதாவை இறுதி செய்யவும் ஒப்புதல் அளித்துள்ளது.

ஆகவே, உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006 மத்திய  அரசால் திரும்பப் பெறப்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று விளக்கியுள்ளார்.

http://www.dinamani.com/latest_news/2014/11/06/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/article2510679.ece

ஞாயிறு, 2 நவம்பர், 2014

குடிநீர் வினியோகிக்கும் டேங்கர்களில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு

கடலூர்: கடலூரில் தொற்று நோய் பரவாமல் தடுக்க கலெக்டர் உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினர் குடிநீர் டேங்கர் டிராக்டர்களை சோதனை செய்தனர்.

கடலூர் அடுத்த தொண்டமாநத்தம் கிராமத்தில் 50க்கும் மேற்பட்டோருக்கு டயரியா பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து குடிநீர் மூலம் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா தலைமையில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சுப்ரமணியன், பழனிவேல் ஆகியோர் நேற்று கடலூரில் குடிநீர் விற்பனை செய்ய வந்த டேங்கர் வண்டிகளை நிறுத்தி, குடிநீரில் குளோரின் கலந்து வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்தனர். குளோரின் கலக்காத தண்ணீரை திறந்துவிட்டு வெளியேற்றினர். மேலும் டேங்குகளை அடிக்கடி சுத்தம் செய்யவும், ஆயிரம் லிட்டர் தண்ணீரில் 4 கிராம் குளோரின் விட அறிவுறுத்தினார்.

செவ்வாய், 28 அக்டோபர், 2014

கடலூரில் 31ம் தேதி ஆர்ப்பாட்டம்; தொழில் வர்த்தக சங்கம் அறிவிப்பு

பண்ருட்டி : மத்திய அரசின் கவனத்தை ஈர்த்திட மாவட்ட தொழில் வர்த்தக சங்கம் சார்பில் வரும் 31ம்தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
மாவட்ட தொழில் வர்த்தக சங்க தலைவர் சண்முகம், செயலர் வீரப்பன் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கை: கடந்த கால மத்திய அரசினால் சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு, உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம், ஆன்லைன் வர்த்தகம் போன்ற சட்டங்களால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதித்துள்ளது. இந்நிலை மேலும் தொடராமல் இருக்க வணிகர்களின் நிலையை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வது அவசியம்.இதற்காக டில்லியில் நடந்த அகில இந்திய வணிகர்களின் சம்மேளன கூட்டத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.அதன்படி தமிழகத்தில் தமிழ்நாடு வணிகர் சங்களின் பேரமைப்பு சார்பில் வரும் 31ம் தேதி காலை 10:00 மணிக்கு கடலூரில் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் அனைத்து வணிகர்களும் கலந்து கொண்டு தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டுகின்றோம்.

ஞாயிறு, 26 அக்டோபர், 2014

கீரப்பாளையம், புவனகிரியில் உணவு பாதுகாப்பு அதிகாரி திடீர் சோதனை

25102014_epsuu3

புவனகிரி, அக்.25-

கீரப்பாளையம், புவனகிரியில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

காலாவதியான உணவு பொருட்கள்

கீரப்பாளையம், புவனகிரி பகுதியில் உள்ள கடைகளில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்வதாக மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலகத்துக்கு புகார்கள் சென்றன. அதன்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் ராஜா மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பத்மநாபன், அருண்மொழி, குணசேகரன் ஆகியோர் கீரப்பாளையம் கடை வீதியில் உள்ள கடைகளில் நேற்று காலை திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது தயாரிப்பு தேதி இல்லாத மற்றும் காலாவதி தேதி முடிந்தும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த உணவு பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் காலாவதியான உணவு பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடை உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கை விடுத்தார்.

டாஸ்மாக் கடையில் ஆய்வு

பின்னர் புவனகிரி பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு செய்தனர். அப்போது மதுபானங்களில் கலப்படம் உள்ளதா? அரசு நிர்ணயித்த விலைக்கு விற்கப்படுகிறதா? அல்லது கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறதா? என்று மதுபிரியர்களிடம் கேட்டறிந்தார். ஆனால் மதுபிரியர்கள் எதுவும் கூறவில்லை.

டாஸ்மாக் கடையில் ஆய்வு

புவனகிரி:புவனகிரி, கீரப்பாளையம் பகுதியில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.புவனகிரி பஸ் நிலையத்திற்குள் இயங்கும் டாஸ்மாக் கடையில் போலி மது பாட்டில்கள் விற்கப்படுகிறதா என நேற்று மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா ஆய்வு மேற்கொண்டார். அதில், வெளிநாட்டு மது வகை என பாட்டில்களில் போலி லேபிள் ஒட்டப்பட்டுள்ளதா என சோதனை செய்தார்.தொடர்ந்து புவனகிரி, கீரப்பாளையம் கடைத்தெரு பகுதியில் பெட்டிக் கடைகள், கூல்டிரிங்ஸ், டீ கடை மற்றும் சிற்றுண்டி கடைகளில் கலப்படம் செய்யப்பட்ட மற்றும் காலாவதியான பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறதா எனவும் ஆய்வு செய்தார்.ஆய்வின் போது காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்தும், அதனை விற்பனை செய்பவர்கள் மீது எச்சரிக்கையும் விடுத்தார். சிதம்பரம் வட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி பத்மநாபன், கீரைப்பாளையம் அருள்மொழி, புவனகிரி குணசேகரன் உடனிருந்தனர்.

வெள்ளி, 24 அக்டோபர், 2014

தீபாவளி விற்பனைக்காக செய்த தரமற்ற இனிப்பு, பலகாரங்கள் பறிமுதல்

கடலூர், : கடலூர் மாவட்டத்தில், சுகாதாரமற்ற முறையில் தயார் செய்யப்பட்ட இனிப்பு பலாகாரங்களை உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்தனர்.
தீபாவளி பண்டிகை முன்னிட்டு முக்கிய அம்சமாக அமைந்துள்ள இனிப்பு மற்றும் பிற பலகார வகைகள் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விற்பனை செய்யப்படும் பலகாரங்கள், இனிப்பு வகைகள் தரமானதாக இல்லையென தொடர் புகார் வந்தது. அதன்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா தலைமையில் மாவட்டம் முழுவதும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் இனிப்பு வகைகள் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் எண்ணெய் மற்றும் பொருட்கள் பயன்பாடு, தடை செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சுகாதாரமற்ற முறையில் தயார் செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டு 125 கிலோ இனிப்பு மற்றும் பலகார வகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடலூர் பகுதியில் திருமண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் சொரக்கல்பட்டு சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் தயாரிக்கப்பட்ட இனிப்புகள் ஆய்வகத்தில் சோதனை செய்ய எடுத்து செல்லப்பட்டது.

திங்கள், 20 அக்டோபர், 2014

பலகாரங்களை சுகாதாரமாக தயாரிக்க உணவு பாதுகாப்பு அதிகாரி அறிவுறுத்தல்

கடலூர் : ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய் மீண்டும் பயன்படுத்தக் கூடாது என உணவு பாதுகாப்பு அதிகாரி வலியுறுத்தியுள்ளார்.
கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடலூர் மாவட்டத்தில் உள்ள நகர மற்றும் கிராமப்பகுதி அனைத்திலும் தீபாவளியையொட்டி இனிப்பு மற்றும் காரவகை பலகாரங்கள் தயார் செய்து வருகின்றனர். பலகாரங்கள் தயார் செய்து வரும் நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் அனைவரும் மக்களின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு சுகாதார வழிமுறைகளை தவறாது கடைபிடிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.பலகாரங்கள் செய்யுமிடம், சேமித்து வைக்குமிடம் விற்பனை செய்யுமிடம் சுத்தமாக இருக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக செயற்கை சாயப்பொருட்கள், சுவையூட்டிகள் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக் கூடாது. தரமான மாவு மற்றும் தரமான எண்ணெய் வகைகளை பயன்படுத்தி பலகாரங்கள் தயாரிக்க வேண்டும். பலகாரங்கள் ஈ மொய்க்காமலும், தெரு புழுதி படாமலும் மூடி வைக்க வேண்டும். இனிப்பு வகைகளை பட்டர் பேப்பரில் வைக்க வேண்டும்.இறைச்சி கடை நடத்துவோர் ஆரோக்கியமான பிராணிகளையும், கோழிகளையும் கொண்டு கறி வியாபாரம் செய்ய வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

புதன், 15 அக்டோபர், 2014

கடலூரில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பறிமுதல்

கடலூர்: கடலூரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதை பொருட்களை போலீசார் கைப்பற்றினர். கடலூர், திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் உள்ள குடோனில், அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்களின் பாக்கெட்டுகள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் கடலூர் ரவுடி ஒழிப்பு இன்ஸ்பெக்டர் ஜெரால்டு ராபின்சன், ஏட்டு ஜான்பீட்டர் மற்றும் போலீசார் திருப்பாதிரிப்புலியூர் கிருஷ்ணன் தெருவில் உள்ள பண்ருட்டியைச் சேர்ந்த பாரதி (30) என்பவருக்கு சொந்தமான குடோனில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அதில், 8 மூட்டைகள் ஹான்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. அவற்றை கைப்பற்றி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜாவிடம் ஓப்படைக் கப்பட்டது. கைப்பற்றப்பட்ட பொருட்கள் பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பட்டு, போதை பொருட்கள் தான் என தெரிய வந்தால் குடோன் உரிமையாளர் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள் ளப்படும், தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கை களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என தெரிவித்தார்.

வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

நெய்வேலி அருகே குளிர்பானம் குடித்த சிறுமி உயிரிழப்பு-புதியதலைமுறை செய்தி

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே, குளிர்பானம் அருந்திய 9 வயது சிறுமி ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்துள்ளார். மேலும் 3 குழந்தைகள் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நெய்வேலியை அடுத்த தெற்கு சேப்பளநத்தம் கிராமத்தைச் சேர்ந்த அஞ்சாபுலி என்பவர், தனது குழந்தைகளுக்கு அப்பகுதியில் உள்ள கடை ஒன்றில் பிரபல நிறுவனத்தின் தயாரிப்பிலான குளிர்பானத்தை வாங்கி கொடுத்துள்ளார்.
அதனை குடித்த அவரது நான்கு குழந்தைகளும் சிறிது நேரத்தில் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தைகளை குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்பு மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அபிராமி என்ற 9 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற 3 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
CHILD PEPSI
இதையடுத்து குளிர்பானத்தை விற்பனை செய்த நாகரத்தினம், விநியோகம் செய்த பாபு ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நாகரத்தினம் கடையை ஆய்வு செய்து சீல் வைத்தனர்.
குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உணவு பாதுகாப்புத்துறையினர் சோதனை
நெய்வேலி அருகே சேப்ளாநத்தம் பகுதியில் குளிர்பானம் அருந்திய சிறுமி உயிரிழந்ததை அடுத்து, மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையினர் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் டாக்டர் ராஜா தலைமையில் 15 பேர் கொண்ட குழு பல இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில், மந்தாரகுப்பம் 4 ரோடு பகுதியில் ஒரு கடையில் காலாவதியான குளிர்பான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து, அந்தக் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
குளிர்பானத்தில் “பேண்ட் எயிட்”
COKE
குளிர் பானங்களில் கலப்படம் செய்து விற்பனையாகிறது என்ற தகவல் வெளியானதையடுத்து, நமது நேயர் ஒருவர் குளிர்பானம் ஒன்றை நமது அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். பன்னாட்டு நிறுவனத்தின் தயாரிப்பான அந்த குளிர்பான பாட்டிலின் உள்ளே பேண்ட் எயிட் (Band Aid) ஒன்று காணப்படுகிறது.

குளிர்பானம் குடித்த சிறுமி பலியான வழக்கில் கடை உரிமையாளர் ,விநியோகிஸ்தர் கைது

குளிர்பானம் குடித்த சிறுமி சாவு: கடை உரிமையாளர் உள்பட இருவர் கைது

  • குளிர்பான நிறுவனத்துக்கு தடை விதிக்கக் கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர். (உள்படம்) குளிர்பானம் குடித்ததால் இறந்த சிறுமி அபிராமி.
    குளிர்பான நிறுவனத்துக்கு தடை விதிக்கக் கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர். (உள்படம்) குளிர்பானம் குடித்ததால் இறந்த சிறுமி அபிராமி.
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே, குளிர்பானம் குடித்த சிறுமி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தார். மேலும், 3 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுதொடர்பாக கடை உரிமையாளர் உள்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர். குளிர்பானக் கிடங்குக்கு சீல் வைக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம், தெற்கு சேப்ளாநத்தம் பகுதியைச் சேர்ந்த சின்னதம்பி மகன் அஞ்சாபுலி (31). நெய்வேலி என்எல்சியில் ஒப்பந்தத் தொழிலாளியாக பணிபுரிகிறார். இவரது மனைவி கலையரசி. இவர்களுக்கு லலிதா (10), அபிராமி (8), கெüசல்யா (6) என்ற 3 மகள்கள், பரமசிவம் (3) என்ற மகன் உள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு அஞ்சாபுலி, அங்குள்ள பெட்டிக் கடையில் பிரபல நிறுவன தயாரிப்பு குளிர்பான பாட்டிலை வாங்கிச் சென்று, குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார். குளிர்பானத்தை குடித்த சிறிது நேரத்தில் 4 குழந்தைகளும் மயக்கமடைந்தனர்.  
சிறுமி சாவு: இதையடுத்து, குழந்தைகள் கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிறுமி அபிராமி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தார். மற்ற 3 குழந்தைகளும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.
ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார், ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 3 குழந்தைகளின் உடல் நிலையை, கடலூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் குழு நேரில் கண்காணித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டார்.
குளிர்பான கிடங்குக்கு சீல்: சம்பந்தப்பட்ட குளிர்பானக் கடையை மூடவும் ஆட்சியர் உத்தரவிட்டார். கடை உரிமையாளர் நாகரத்தினம், மொத்த விற்பனையாளர் வடலூர் பாபு ஆகியோரை போலீஸார் திங்கள்கிழமை காலை கைது செய்தனர். தவிர, வடலூரில் உள்ள குளிர்பான குடோன், அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
  இந்த குளிர்பான தயாரிப்பு மையம், காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ளது. காஞ்சிபுரம் ஆட்சியரிடம் பேசி அங்கு தயாரிக்கப்படும் குளிர்பானம் ஆய்வுக்கு எடுக்க ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
பாட்டில்கள் பறிமுதல்: குழந்தைகள் குடித்த குளிர்பானம் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வரிசை எண்ணில் (பேட்ச்) தயாரிக்கப்பட்ட குளிர்பான பாட்டில்கள் 40 கடைகளில் விற்பனைக்கு அனுப்பப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த குளிர்பான பாட்டில்களை பறிமுதல் செய்ய ஆட்சியர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரி ராஜா, மற்றும் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் அந்தக் கடைகளை ஆய்வு செய்து குளிர்பானங்களை பறிமுதல் செய்தனர்.
ஆய்வு முடிவு அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார். இதுபோல, கடலூர் மாவட்டத்தில் உள்ள பேக்கரிகள், குளிர்பானக் கடைகள், ஹோட்டல்களில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
விடுதலை சிறுத்தைகள் மறியல்: இறந்த அபிராமியின் உடலை மருத்துவர்கள் குழு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும், சம்பந்தப்பட்ட குளிர்பான நிறுவனத்துக்கு தடை விதிக்க வேண்டும், பெற்றோருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், மாவட்டச் செயலர் பா.தாமரைச்செல்வன் தலைமையில் கடலூர்-நெல்லிக்குப்பம் சாலையில், கடலூர் அரசு தலைமை மருத்துவமனை முன் திங்கள்கிழமை காலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள், போலீஸார் பேச்சுவார்த்தைக்குப் பிறகு போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

குளிர்பானம் குடித்து சிறுமி பலியான விவகாரம் விற்பனையாளர், விநியோகஸ்தர் கைது கலெக்டர் கிர்லோஷ்குமார் தகவல்-தினத்தந்தி செய்தி

குளிர்பான குடோனுக்கு சீல்

12_02_2014_002_014

குடோனுக்கு சீல் வைப்பு வடலூரில் காலாவதியான 2 ஆயிரம் குளிர்பானங்கள் பறிமுதல்

20140212a_005103016

குளிர்பானம் குடித்த குழந்தை சாவு எதிரொலி 18 பேர் கொண்ட குழு கடைகளில் ஆய்வு-தினமணி செய்தி

குளிர்பானம் குடித்த குழந்தை இறந்ததால், 18 பேர் கொண்ட குழு கடலூர் மாவட்டத்தில் குளிர்பான கடைகள் மற்றும் கிடங்குகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளது.
நெய்வேலி அருகே சேப்ளாநத்தத்தில் பிரபல நிறுவனத்தின் குளிர்பானத்தை குடித்த சிறுமி அபிராமி(8), ஞாயிற்றுக்கிழமை இரவு பலியானார். இதைத்தொடர்ந்து கடலூர் மாவட்டம் முழுவதும் குளிர்பான கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
  இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா கூறியது: சிறுமி பலியாக காரணமாக இருந்த குளிர்பானம் விற்ற கடையில் இருந்த அனைத்து குளிர்பானங்களையும் கைப்பற்றி சென்னையில் ஆய்வுக்கு அனுப்பி இருக்கிறோம். அதன் ஆய்வு வந்ததற்கு பிறகு தான் சிறுமி சாவுக்கு காரணம் என்ன என்பது பற்றி தெரியவரும்.
இந்த சம்பவத்தை அடுத்து மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நெய்வேலி, மந்தாரக்குப்பம், வடலூர், காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், கீரப்பாளையம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
மேலும் பல்வேறு இடங்களிலும் சோதனை நடந்து வருகிறது. 18 ஊழியர்கள் 4 குழுக்களாக பிரிந்து சென்று இந்த சோதனையை நடத்தி வருகிறார்கள். இதுதவிர 13 ஒன்றியம், 5 நகராட்சிகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளனர். அவர்களும் சோதனை நடத்தி வருகின்றனர்.
காலாவதியான குளிர்பானங்களை வைத்திருந்த மற்றும் உரிய ஆவணம் இல்லாமல் வைத்திருந்த 2 குடோன்கள், 2 கடைகள் ஆகியவற்றுக்கு சீல் வைத்துள்ளோம்.
பொதுமக்கள் குளிர்பானங்களை வாங்கும்போது அதன் காலாவதி தேதியை பார்த்து வாங்க வேண்டும். உள்ளூர் தயாரிப்புகளான ரஸ்னா, தண்ணீர் பாக்கெட், போன்றவற்றை வாங்குவதை தவிர்க்க வேண்டும். அதில் காலாவதி தேதி போன்ற விவரங்கள் எதுவுமே இருக்காது.
சமூக நல அமைப்புகள் மூலம் மாவட்டம் முழுவதும் குளிர்பானம் தொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்தையும் செய்ய இருக்கிறோம் என்றார்.

உணவு பாதுகாப்பு அதிகாரி நெய்வேலியில் சோதனை

உணவு பாதுகாப்பு அதிகாரி நெய்வேலியில் சோதனை

உணவு பாதுகாப்பு அதிகாரி பண்ருட்டியில் சோதனை

தரமற்ற உணவுகள் விற்போர் மீது நடவடிக்கை

கடலூரில் உள்ள பல்பொருள் அங்காடியில் உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா சோதனை மேற்கொண்டார்.

Photo Gallery

அண்ணாமலை பல்கலை கேண்டீனில் மாவட்ட உணவு அதிகாரி ஆய்வு