திங்கள், 10 நவம்பர், 2014

கடலூரில் உணவு பாதுகாப்புத் துறை வழிகாட்டு விழிப்புணர்வுக் கூட்டம்கடலூர் : உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் கடலூர் நகரில் டேங்கர் லாரிகளில் வினியோகம் செய்யும் லாரி உரிமையாளர்களுடனான விழிப்புணர்வுக் கூட்டம் நேற்று நடந்தது.
கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை அலுவலர்கள் ரவிச்சந்திரன், சுப்ரமணியன், நந்தகுமார் ஆகியோர் கேப்பர் மலைப் பகுதியிலிருந்து கடலூர் நகருக்கு டேங்கர் லாரிகள் மற்றும் டிராக்டர்களின் குடிநீர் வினியோகம் செய்வதற்கான தண்ணீர் பிடிக்கும் இடங்களை ஆய்வு செய்தனர். அப்போது அடிப்படை குறைகள் கண்டறியப்பட்டது.இவற்றை சரிசெய்யும் பொருட்டு, நேற்று கடலூர் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் விழிப்புணர்வுக் கூட்டம் கடலூர் தாலுகா அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா தலைமை தாங்கினார். ஆய்வாளர்கள் ரவிச்சந்திரன், பத்மநாபன், குணசேகரன், நந்தகுமார், கந்தசாமி, செந்தில் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 15க்கும் மேற்பட்ட குடிநீர் வினியோகம் செய்யும் லாரி உரிமையாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், குடிநீரை கிருமி நீக்கம் செய்யப்பட்டு விநியோகிக்கப்பட வேண்டும். 1,000 லிட்டர் குடிநீரில் 4.5 கிராம் குளோரின் பவுடர் கலந்து விற்பனை செய்ய வேண்டும். வாரம் ஒரு முறை கண்டிப்பாக தண்ணீர் நிரப்பும் உட்பகுதியை சுத்தம் செய்ய வேண்டும்.குடிநீர் எடுத்துச் செல்லும் வண்டிகளுக்கு நீலநிற வர்ணம் பூசப்பட்டிருக்க வேண்டும். குடிநீர் வினியோகம் செய்யும் பணிகளுக்கு மருத்துவ தகுதிச் சான்று மற்றும் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். வாகனத்திற்கான உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின்படி பதிவு உரிமம் பெற வேண்டும். வாகனத்தில் ஆய்வு பதிவேடு கண்டிப்பாக இருக்க வேண்டும்.இந்த சட்ட விதிமுறைகளை செய்து குடிநீர் வினியோகம் செய்யும் வாகனங்கள் வரும் டிசம்பர் 5ம் தேதி மஞ்சக்குப்பம் மைதானத்தில் ஆய்வுக்கா நிறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

1 கருத்து: