வியாழன், 27 நவம்பர், 2014

ஜாம் பாட்டிலில் பூச்சி: உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஆய்வு

IMG-20141126-WA0006

 

கடலூரில் விற்பனையான ஜாம் பாட்டிலில் பூச்சி இருந்தது தொடர்பாக உணவுப் பாதுகாப்பு அலுவலர் திங்கள்கிழமை விசாரணை நடத்தினார்.
அனைத்து நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பேரவை துணைத் தலைவர் ஆர்.துவாரகநாத் கந்தசாமி. இவர், கடந்த 19-ம் தேதி கடலூர் சங்கரநாயுடு தெருவில் உள்ள ஒரு கடையில் மிக்ஸ்டு புரூட் ஜாம் வாங்கி குடும்பத்தினருடன் சாப்பிட்டார். அதில் விஷத்தன்மை உள்ள சில பூச்சிகள் இறந்த நிலையில் இருந்தது தெரிய வந்தது.
இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடலூர் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலருக்கு வெள்ளிக்கிழமை புகார் மனு அனுப்பினார்.
இந்த புகார் தொடர்பாக மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் எம்.பி.ராஜா திங்கள்கிழமை சம்பந்தப்பட்ட கடையில் ஆய்வு மேற்கொண்டார். அதில், குறிப்பிட்ட ஜாம் பாட்டிலுடன் வந்திருந்த மற்ற பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. அந்த பாட்டில்கள் ஆய்வுக்கு சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், அதுவரையில் அந்த வகை ஜாமை விற்பனை செய்யக் கூடாதென கடை உரிமையாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக எம்.பி.ராஜா தெரிவித்தார்.

1 கருத்து:

  1. பூச்சி உற்பத்தி நிலயத்திலிருந்து வந்ததா , விற்பனையாளர் சரியாக சேமித்து வைக்காததான் அடிப்படையில் வந்ததா எனவும் ஆய்வு செய்ய வேண்டும்.இரு இடங்களிலும் பூச்சி தடுப்புக்கான நடவடிக்கை எடுக்கவில்லை என தெளிவுபடுத்துகிறது உற்பத்தியாளர் மீதும் நடவடிக்கை தேவை

    பதிலளிநீக்கு