பக்கங்கள்
- HOME
- FORMS
- ACT&RULES
- CUDDALORE DISTRICT
- CUDDALORE TOWN
- CHIDAMBARAM TOWN
- PANRUTI TOWN
- PANRUTI BLOCK
- KAMMAPURAM BLOCK
- CUDDALORE BLOCK
- ANNAGRAMAM BLOCK
- KURINJIPADI BLOCK
- KEERAPALAYAM BLOCK
- PARANGIPETTAI BLOCK
- BHUVANAGIRI BLOCK
- VRIDHACHALAM BLOCK
- NALLUR BLOCK
- MANGALUR BLOCK
- KATTUMANNARKOIL BLOCK
- KUMARATCHI BLOCK
- VRIDHACHALAM TOWN

செவ்வாய், 17 பிப்ரவரி, 2015
வியாழன், 8 ஜனவரி, 2015
காட்டுமன்னார்கோவிலில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் திடீரென ஆய்வு செய்தார்
ஆய்வு
காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள கடைகள், ஓட்டல்களில் தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலகத்துக்கு புகார்கள் சென்றது. அதன்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா பஸ் நிலையம், கச்சேரி தெரு, சிதம்பரம் மெயின் ரோடு ஆகிய இடங்களில் உள்ள டீக்கடை, உணவகம், குளிர்பான கடை, மளிகை கடை ஆகியவற்றில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களை ஆய்வு செய்தார்.
எச்சரிக்கை
அப்போது காலாவதியான குளிர்பானங்களை விற்பனை செய்யக்கூடாது, விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் உணவு பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் உணவு பொருட்களின் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி ஆகியவற்றை அச்சிட்டிருக்க வேண்டும், தயாரிப்பு தேதி இல்லாத பொருட்களை பொதுமக்கள் வாங்கி ஏதாவது விபரீதம் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட கடைக்காரர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், உணவகங்களில் சுகாதாரமான குடிநீரை பயன்படுத்தவேண்டும் என்று கடைக்காரர்களை உணவு பாதுகாப்பு அதிகாரி எச்சரித்தார். அப்போது அவருடன்வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சுப்பிரமணியன் உடனிருந்தார்.
கடலூர் மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த 23 மதுபார்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்ததுடன், அதன் உரிமையாளர்கள் மீது வழக்கு தொடர்ந்தனர்.
232 மதுக்கடைகள்
கடலூர் மாவட்டத்தில் 232 டாஸ்மாக் கடைகள் உள்ளன. அருகில் மதுபார்களும் இயங்கி வருகின்றன. இந்த மதுபார்களை டாஸ்மாக் மாவட்ட நிர்வாகம் ஆண்டு தோறும் ஏலம் நடத்தி அதிக தொகைக்கு கேட்பவர்களுக்கு மதுபார் நடத்த அனுமதி கொடுக்கிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு வெறும் 57 மதுபார்கள் மட்டுமே ஏலம் போனது. மீதமுள்ள பார்களை ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை.
அனுமதி இல்லாமல்...
இந்த நிலையில் சில டாஸ்மாக் கடைகளில் அனுமதி இல்லாமல் மதுபார்கள் நடத்தி வருவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் வந்தது. இதை அடுத்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ஜெயச்சந்திரன் தலைமையில் அதிகாரிகள் டாஸ்மாக் கடைகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இதில் வடலூர், நெய்வேலி, கங்கைகொண்டான், விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி, நல்லூர், காட்டு கூடலூர், மங்கலம்பேட்டை என மாவட்டம் முழுவதிலும் 23 மதுபார்கள் எந்தவித அனுமதியும் இன்றி நடத்தி வருவதும் அங்கு பாதுகாப்பற்ற, தரமற்ற உணவுபொருட்கள் விற்பனை செய்யப்பட்டதும் தெரியவந்தது. இவற்றில் அதிகபட்சமாக கங்கைகொண்டான் பகுதியில் 6 மதுபார்களும், வடலூர் பகுதியில் 4 மதுபார்களும் செயல்பட்டு வந்தன.
பார் நடத்துவதற்காக அளிக்கப்பட்ட கால அவகாசம் முடிந்த பின்பும் கடந்த 5 மாதங்களாக இந்த மதுபார்கள் இயங்கி வந்துள்ளன. இதனால் அரசுக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது.
சீல் வைப்பு
இதை அடுத்து அனுமதி பெறாமல் இயங்கிவந்த 23 மதுபார்களையும் குறிப்பிட்ட காலத்துக்குள் மூடும்படி அவற்றின் உரிமையாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் நோட்டீசு அனுப்பியது. ஆனால் அவை தொடர்ந்து இயங்கி வந்ததால் அந்த மதுபார்களை உடனடியாக மூடி சம்பந்தப்பட்ட நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் உத்தரவிட்டார்.
அதன் பேரில் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ஜெயச்சந்திரன், உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் எம்.பி.ராஜா ஆகியோர் தலைமையில் டாஸ்மாக் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகளும், ஊழியர்களும் விரைந்து சென்று அனுமதி பெறாமல் இயங்கி வந்த 23 மதுபார்களையும் பூட்டி சீல் வைத்தனர். மேலும் அதன் உரிமையாளர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அதிகாரிஒருவர் தெரிவித்தார்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)