வியாழன், 8 ஜனவரி, 2015

காட்டுமன்னார்கோவிலில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் திடீரென ஆய்வு செய்தார்


ஆய்வு
காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள கடைகள், ஓட்டல்களில் தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலகத்துக்கு புகார்கள் சென்றது. அதன்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா பஸ் நிலையம், கச்சேரி தெரு, சிதம்பரம் மெயின் ரோடு ஆகிய இடங்களில் உள்ள டீக்கடை, உணவகம், குளிர்பான கடை, மளிகை கடை ஆகியவற்றில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களை ஆய்வு செய்தார்.
எச்சரிக்கை
அப்போது காலாவதியான குளிர்பானங்களை விற்பனை செய்யக்கூடாது, விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் உணவு பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் உணவு பொருட்களின் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி ஆகியவற்றை அச்சிட்டிருக்க வேண்டும், தயாரிப்பு தேதி இல்லாத பொருட்களை பொதுமக்கள் வாங்கி ஏதாவது விபரீதம் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட கடைக்காரர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், உணவகங்களில் சுகாதாரமான குடிநீரை பயன்படுத்தவேண்டும் என்று கடைக்காரர்களை உணவு பாதுகாப்பு அதிகாரி எச்சரித்தார். அப்போது அவருடன்வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சுப்பிரமணியன் உடனிருந்தார்.

1 கருத்து:

  1. உணவு பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க தவறும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கலாமே !

    பதிலளிநீக்கு